புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தரம் 6 மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு

renuka
வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று கடந்த 05.01.2026 அன்று பாடசாலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் (பாடவிதான அபிவிருத்தி) திரு. P. தர்மேந்திரா (BBA) அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அவசியம், அதன் கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் எவ்வாறு புதிய பாடத்திட்டங்களுக்கு தங்களை இசைவாக்கிக் கொள்ளலாம் என்பது குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு வளவாளர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். தரம் 6 மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வளவு அவசியமானது என்பது இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தரம் 6 மாணவர்களின் பெருமளவிலான பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

More Images

Comments 0

Leave a thought

No comments yet.